BREAKING NEWS

செல்போனை எடுக்காத தந்தை… சடலத்துடன் இருந்த அம்மா.

செல்போனை எடுக்காத தந்தை… சடலத்துடன் இருந்த அம்மா.

செல்போனை எடுக்காத தந்தை... சடலத்துடன் இருந்த அம்மா: வீட்டு பூட்டை உடைத்த போலீஸார் அதிர்ச்சி

சென்னையில் வசித்து வந்த‌ தந்தை போன் எடுக்காததால், காவல் துறைக்கு மகள் தகவல் கொடுத்துள்ளார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை புரசைவாக்கம் வைக்கோல்காரன் தெருவில் வசித்து வந்தவர் அசோக் பாபு (53). இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான மகள், பெங்களூருவில் உள்ள கணவர் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக தனது அப்பா அசோக் பாபுவுக்கு போன் செய்துள்ளார் மகள் ஆர்த்தி. ஆனால், தந்தை போன் எடுக்கவில்லை. இதையடுத்து, காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் ஆர்த்தி.

இதைத் தொடர்ந்து, வேப்பேரி காவல் துறையினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர், கதவை உடைத்து காவல் துறையினர் உள்ளே சென்றனர். அப்போது, அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்ததோடு, மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பத்மினி (48) அருகில் இருந்து கொண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அசோக் பாபுவின் மனைவி பத்மினியை அரசு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )