சேலம் அருகே கிணற்றில் சினைபசுமாடு தவறி விழுந்தது தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு..

சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாநத்தம் வைத்தியநாதபுரம் கிராமத்தில் மாரிமுத்து என்பவர் தனது விவசாய தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
மேலும் இன்று காலை பசுமாடு அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்றபோது அப்பகுதியில் 40அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி பசுமாடு விழுந்தது உடனடியாக பாட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில்,.
தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அப்பகுதியில் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இருந்த சினையுடன் இருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
சினைப் பசுமாட்டை உயிருடன் மீட்ட தீணிப்புத் துறையினருக்கு கண்ணீர் மல்க விவசாயி நன்றி தெரிவித்தார்.
CATEGORIES சேலம்
TAGS 40அடி ஆழம் கிணற்றில் தவறி விழுந்த பசுமாடுஆத்தூர் தீயணைப்பு வீரர்கள்கல்லாநத்தம் வைத்தியநாதபுரம் கிராமம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்