சேலம் ரங்கன் தெருவில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது .
சேலம் மாவட்டம் nஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட முல்லைவாடி 3வது வார்டில் உள்ள ரங்கன் தெருவில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாத நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அப்பகுதிக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .
அப்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரங்கன் தெருவில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது .
இதில் டிரான்ஸ்பார்ம் கம்பத்திற்கு கீழே படுத்திருந்த ஆறு பன்றிகள் மின்சாரம் தாக்கி இறந்தன.
அந்த நேரத்தில் அவ்வழியாகச் சென்ற 3 பெண்கள் மீதும் மின்சார ஒயர்கள் பட்டதில் தூக்கி வீசப்பட்டனர் இதில் மாரியம்மாள் , ராதிகா, முத்தாயம்மாள் ஆகிய மூன்று பெண்கள் படுகாயமடைந்து ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகிறார்கள் .