ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஆய்வு.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் ஏழைகாத்தம்மன் ஸ்ரீ வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இக்குழுவிற்கு தலைவராக எஸ் கே மிட்டல் உள்ளார்.
இன்று தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மீட்டல் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் பகுதி, காளைகள் கொண்டுவரப்படும் பகுதி, காளைகளுக்கு மருத்துவ வசதி செய்யக்கூடிய பகுதி, மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ வசதி செய்யக்கூடிய பகுதி,
மாடுபிடி வீரர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், மாடுகளை ஒன்று சேர்த்து பிடிக்கும் இடமான கலெக்சன் பாயிண்ட் பகுதி போன்ற பல்வேறு பகுதிகளினை அவர் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வருவாய்த்துறையினர், பொதுப்பணி துறையினர், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனும் விழா ஏற்பாட்டாளர்களுடனும் அவர் கலந்த ஆலோசனை மேற்கொண்டார்.
எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தி முடிக்குமாறு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பார்வையாளர்கள் அமரும் பகுதிகள் அவர்களுக்கு தேவையான வசதிகள் மாடுபிடி வீரர்களுக்கு என்னென்ன மாதிரியான வசதிகள் செய்து தர வேண்டும்,
காளைகளுக்கு எவ்வாறான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் குறித்து கேட்டறிந்து மேலும் அவர் பல்வேறு திருத்தங்களையும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது அவருடன் ஜல்லிக்கட்டு ஆய்வு குழுவைச் சார்ந்தவர்களும் அனைத்து அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
நாளை நடைபெற உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, குக்கர், மிக்ஸி என ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பிற்காக சுமார் 600 க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சார்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மூன்று மருத்துவக் குழு உறுப்பினராக பிரிக்கப்பட்டு மருத்துவ செவிலியர் என முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தீவிர பரிசோதனைக்கு பின்னரே மாடுபிடி வீரர்களும் காளைகளும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா இப்போோட்டினை துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.