BREAKING NEWS

ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தம்பதியினரிடம் தீண்டாமையை கடைபிடிக்கும் கிராம மக்கள்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தம்பதியினரிடம் தீண்டாமையை கடைபிடிக்கும் கிராம மக்கள்.

தஞ்சாவூரில், ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால், கிராம மக்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக தம்பதியினர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வையாபுரிபட்டியைச் சேர்ந்தவர் சந்திரகுமார்,38, இவர் ஆய்வகங்களுக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக திருச்சியில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி பொம்மியம்மாள் ,32, மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர் கூட்டத்தில், பொம்மியம்மாள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நானும், எனது கணவரும் காதலித்து கடந்த 2010ம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம். 2 பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். திருமணத்தை முறைப்படி பதிவும் செய்துள்ளோம். எங்களுக்கு அதியமான் தமிழன்,11, என்ற மகனும், அனு வேலுநாச்சியார்,9, என்ற மகளும் உள்ளனர்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் எங்களது ஊரில் நடக்கும் திருவிழா உட்பட எந்த விழாக்களுக்கும் ஊர் வரி எங்களிடம் வாங்குவதில்லை. எங்களை ஒதுக்கி வைத்து தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள். இது 12 ஆண்டுகளாக தொடர்கிறது. இது எனது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )