ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், தார்சாலை அமைப்பதற்கான பணி.

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், ஜெயபுரம் கூட்டு ரோடு முதல் வெலக்கல்நத்தம் கூட்டு ரோடு வரை தார்சாலை அமைப்பதற்கான பணிகளை
கதிரிமங்கலம் பகுதியில் பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் க.உமாகன்ரங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.