டீ கடையில் மறதியாக விட்டு சென்ற 5 லட்சம் மதிப்பிலான கேமரா; உரியவரிடம் ஒப்படைத்த கடைக்காரர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மகாதேவன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜா மற்றும் சஞ்சய் ஆகிய இருவர் புகைப்படம் எடுப்பதற்காக திருமண விழாவிற்கு வந்தனர்.
நேற்றிரவு விழாவை முடித்துவிட்டு நாகர்கோவில் செல்லும் வழியில் நாங்குநேரி டோல்கேட் அருகே டீக்கடையில் டீ குடித்துவிட்டு அவர்களுடைய புகைப்பட சாதனங்களை அங்கே மறந்து வைத்துவிட்டு காவல்கிணறு வரை சென்று விட்டார்கள்.
அதன்பின்னு தான் அவர்களுக்கு ஞாபகம் வந்து நம்மளுடைய கேமராவை டீக்கடையில் வைத்து விட்டு வந்து விட்டோமே என்று பதறிப் போய் சேரன்மகா தேவியை சேர்ந்த தங்கராஜ் என்ற புகைப்பட கலைஞருக்கு இரவு 12 மணியளவில் போன் செய்து…
என்னுடைய கேமரா இந்த கடையில் உள்ளது நீங்கள் சென்று அந்த கேமராவை வாங்கி வையுங்கள் நாங்கள் வந்து உங்களிடம் வாங்கிக் கொள்கிறோம் என்று சஞ்சய் ராஜா கூறி இருக்கிறார்கள் தங்கராஜ் என்பவர் டோல்கேட்டில் டீக்கடை டீ கடை நடத்தி வரும் ஹை கோர்ட் என்பவர் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான கேமராவை தங்கராஜ் இடம் ஒப்படைத்துள்ளார்.
அந்த இடத்திற்கு கேமராவுடைய உரிமையாளரும் வந்து விட்டார். ஆகிய மூவரும் சேர்ந்து டீக்கடை உரிமையாளர் ஹை கோர்ட் என்பவரை வெகுவாக பாராட்டினர் அந்த பகுதியில் வாழும் பொது மக்களும் புகைப்பட கலைஞர்களும் நேரிலும் சென்று போனிலும் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.