BREAKING NEWS

ட்விட்டருக்கு ரூ.1,100 கோடி அபராதம்!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

ட்விட்டருக்கு ரூ.1,100 கோடி அபராதம்!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட காரணத்தால் அந்நிறுவனத்துக்கு கலிபோர்னியா நீதிமன்றம் ரூ.1,100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ட்விட்டர் நிறுவனம் உலகம் முழுவதிலும் 229 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வரும் பிரபலமான நிறுவனம். இதனை வாடிக்கையாளர்கள் பலரும் தனிப்பட்ட முறையிலும், தொழில் சம்பந்தமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ட்விட்டர

ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களின் கடந்த மே 2013ம் ஆண்டு முதல்  செப்டம்பர் 2019ம் ஆண்டு வரையிலான தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட  தகவல்களை கணக்குப் பாதுகாப்பிற்காக சேகரித்து வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து சில விளம்பர நிறுவனங்களுக்கு சேகரித்து வைக்கப்பட்ட  தரவுகளை பகிர்ந்து கொண்டதால் குறிப்பிட்ட பயனர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்கள் வரத்தொடங்கின. இதன் பின்னணியில் ட்விட்டர் நிறுவனம் விளம்பர நிறுவனங்களுக்கு உதவியாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் 140 மில்லியனுக்கும் மேற்பட்ட ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் ட்விட்டரின் முதன்மை வருமானம் அதிகரித்து இருக்கிறது.

இது குறித்து எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் ட்விட்டர் நிறுனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.1,100 கோடி செலுத்த வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பெடரல் டிரேட் கமிஷன் தெரிவித்துள்ளது.

பெடரல் கமிஷனின் இந்த கோரிக்கைகள் கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் ட்விட்டர் நிறுவனம் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )