தங்கம் போல் எகிறும் தக்காளி விலை!!
தங்கம் போல் எகிறும் தக்காளி விலை!!

கொரோனா காலத்திற்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கேஸ் சிலிண்டர் தொடங்கி அனைத்தின் விலையும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் மொத்த விலை ஒரு கிலோ ரூ8க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி படிப்படியாக உயர்ந்து 80 ரூபாய் 90 ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தொடர் மழை, பருவநிலை மாற்றத்தால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த தக்காளி வரத்து குறைந்துள்ளதை அடுத்து தற்போது கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை 1400 ரூபாய்க்கும், ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது தக்காளி விலையும் உயர்ந்து இருப்பது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
