தஞ்சாவூரில் தே.மு.தி.கவினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் தஞ்சை மாநகர் மாவட்ட கழக செயலாளர் மருத்துவர் ப.இராமநாதன் தலைமையில் மாநில அரசின் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்தும்,மத்திய அரசின் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.எஸ்.கே.பழனிவேல், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கோ.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள். கழக உயர்மட்டகுழ உறுப்பினர் தஞ்சை வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர் எம்.முகமது அலி தஞ்சை மாநகர் மாவட்ட உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர் கழக நெசவாளரச் செயலாளர் எம்.சுப்பிரமணியன்,
தஞ்சை தெற்கு மாவட்ட ஊட் கட்சி தேர்தல் பொறுப்பாளர் கழக மீனவர் அணி துணைச் செயலாளர் டி.கஜேந்திரன்
ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் தஞ்சாவூர் வடக்கு தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய, பகுதி, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.