தஞ்சாவூரில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.

புகைப்பிடித்தல் மூலம் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது புகை பிடித்தலின் மூலம் உடலுக்கு தீங்கு விளைவித்து கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது இந்நிலையில் தஞ்சை மாவட்ட ரோல் பால் அசோசியேஷன் சார்பில் புகை பிடித்தலின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை வல்லம் காவல் டிஎஸ்பி பிருந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது இப்பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றனர் இப்பேரணியில் ரோல் பால் அசோசியேசன் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்