தஞ்சாவூரில் ரூ 1 கோடி மதிப்பில் நவீன பொழுதுபோக்கு மையம் மாநகராட்சி சார்பில் திறப்பு.

தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டுகள் பழமையான 130 அடி உயரமுள்ள ராணிஷ் டவர் என்று அழைக்கப்படும் மணிக்கூண்டும் ராஜப்பா பூங்காவும் உள்ளது இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 3 கோடியே 80 லட்சம் மதிப்பில் மணிக்கூண்டு புனரமைக்கப்பட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது.


இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிக்கூண்டை திறந்து வைத்தார் இதனையடுத்து இந்த ராஜப்பா பூங்காவில் தற்போது அதிநவீன வசதிகளுடன் ரூ 1 கோடி மதிப்பில் நவீன பொழுதுபோக்கு மையம் திறக்கப்பட்டுள்ளது.


இம் மையத்தினை மாநகராட்சி மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் உள்ளிட்டோர் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்,


இதில் infinity room, திகில் வீடு மற்றும் குழந்தைகளுக்கான கம்ப்யூட்டர் வீடியோ கேம்ஸ், ஆகியவை அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இந்த பொழுதுபோக்கு மையத்தில் முதல் நாளன்று தஞ்சாவூரில் உள்ள ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
