தஞ்சாவூர் – கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்.

தஞ்சாவூர் – கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் – விக்கிரவாண்டி சாலையில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு டிஎன் 45 சி என பெயரிடப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில் இருபுறமும் மரக்கன்றுகள் நட நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, சாலையை அமைக்கும் ஒப்பந்த நிறுவனமான படேல் நிறுவனம் ஆகியவை முடிவு செய்தது. அதன்படி 75 வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடத்தின் ஒருபகுதியாக நேற்று தஞ்சாவூர் அருகே கடகடப்பை கிராமத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட வனத்துறை அலுவலர் அஜில்அகமது மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் யு.உதயசங்கர், படேல் நிறுவனத்தின் பொது மேலாளர்கள் மல்லிகார்ஜூனாராவ், ராஜேஸ்குமார்சிங், திட்ட மேலாளர் ஷாநவாஸ், மேற்பார்வையாளர் செந்தில், ஊராட்சிமன்றத் தலைவர் பழனி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், படேல் நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த புறவழிச்சாலையில் இருபுறமும் மரக்கன்றுகளும், சாலையில் நடுவின் பூச்செடிகளும் நடப்பட்டது.
படவிளக்கம்: தஞ்சாவூர் அருகே கடகடப்பை கிராமத்தில் தஞ்சாவூர்- கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கியது.