தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள் 2 நகராட்சிகள் 20 பேரூராட்சிகளில் உள்ள 459 பதவிகளுக்கு 2865 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனு பரிசீலனை தொடங்கியுள்ளது தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் குவிந்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் 2 மாநகராட்சிகளுக்கும் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும் திருவையாறு வல்லம் பாபநாசம் பேராவூரணி திருவிடைமருதூர் உள்ளிட்ட 20 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் கும்பகோணம் மாநகராட்சியில் 48 மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 நகர்மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 நகர்மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, 20 பேரூராட்சிகளில் 300 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 459 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது
இந்த தேர்தலை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமாலை 5 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது தஞ்சாவூர் மாநகராட்சியில் 391 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 443 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 189 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 172 பேரும் , 20 பேரூராட்சிகளில் 1670 பேரும் என மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 2865 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மாலை 5 மணிக்கு வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதும் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் கதவு மூடப்பட்டது அப்போது 11-ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருந்த மாரியப்பன் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்றதால் சரியான நேரத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வரமுடியவில்லை இதனால் வேட்பு மனுவை கொண்டு வந்தவர் திரும்பிச் சென்றார்.
இன்று வேட்புமனு பரிசீலனை தற்போது தொடங்கியுள்ளது இதனால் தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு வேட்பாளர்கள் தங்கள் முன்மொழிபவர் உடன் குவிந்துள்ளனர் வார்டு வாரியாக அழைக்கப்பட்டு வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.