BREAKING NEWS

தஞ்சாவூர்

தாய், தந்தை இருந்தும் இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி உள்பட 3 குழந்தைகள் அரசு உதவி கிடைக்குமா ?

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உம்பளபாடி ஊராட்சி இளங்கார்குடி கிராமத்தில் நடுதெருவில் வசித்து வருபவர் கமலா (வயது 58). இவருடைய மகன் ராஜேஷ் (வயது 34) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது இவர் மனைவி சரண்யா (வயது 28) மெலட்டூர் கரம்பையைச் சேர்ந்தவர் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கார்த்திக்சரண் (வயது 7)மாற்றுத்திறனாளியாக உள்ளார். 2-வது மகன் முகேஷ் (வயது 6). 3 – வது மகன் ஸ்ரீவட்சவ் (வயது 3). ராஜேஷ் கொத்தனார் வேலை செய்துவிட்டு வீட்டின் செலவுக்கு பணம் கொடுக்காமல் குடித்துவிட்டு அடிக்கடி மனைவி சரண்யாவிடம் குடும்ப தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு செல்வதாக மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார். மாமியார் கமலா மெலட்டூர் கரம்பை க்கு சென்று அங்கேயும் தேடியுள்ளார் அங்கேயும் வரவில்லை என்று பெண் வீட்டார் தெரிவித்தனர். இந்நிலையில் கமலா பல ஊர்களில் பார்த்து விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து சரண்யாவை தேடி வருகிறார். தாய் தந்தை இருந்தும் இல்லாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 குழந்தைகள் தற்போது இளங்கார்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தவித்து வருகிறது.இந்த மூன்று குழந்தைகளுக்கும் தமிழக அரசு உதவி கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள். மூன்று குழந்தைகளின் தாயாரையும் உடனே கண்டுபிடித்து தரவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய், தந்தை இருந்தும் இல்லாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 குழந்தைகளை படத்தில் காணலாம்.

காணாமல் போன தாய் சரண்யாவை படத்தில் காணலாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )