BREAKING NEWS

தஞ்சையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திரு ஆருரான் தனியார் சர்க்கரை ஆலையை கால்ஸ் நிறுவனம் வாங்கும் நிலையில் தஞ்சையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பெயரில் பழைய நிறுவனம் மோசடியாக பெற்ற கடன்களை சர்க்கரை ஆலை திருப்பி செலுத்த வேண்டும் மோசடியில் ஈடுபட்ட ஆளை உரிமையாளர் வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்

 

 

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் செயல்பட்டு வந்த திரு ஆருரான் தனியார் சர்க்கரை ஆலையை கால்ஸ் நிறுவனம் வாங்க உள்ள நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

 

 

இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் கூட்டம் தொடங்கியதுமே விவசாயிகளுக்கு உரிய அறிவிப்போ அழைப்போ இல்லாமல் கூட்டம் நடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர் தொடர்ந்து நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை கால்ஸ் நிறுவனம் வாங்குவதில் விவசாயிகளுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை,

 

 

ஆனால் விவசாயிகளுக்கு கரும்பு தொகை வழங்குவதாக கூறி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று மோசடியாக பல வங்கிகளில் 500 கோடி ரூபாய் வரை பழைய நிர்வாகம் கடன் பெற்றுள்ளது இந்த கடனை திரும்ப செலுத்துமாறு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்,

 

 

எனவே மோசடியாக கடன் பெற்ற சர்க்கரை ஆலை அந்த கடனை முழுமையாக கட்டி விவசாயிகளை கடன் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் மோசடியில் ஈடுபட்ட ஆலைஉரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.

 

 

 

அவ்வாறு செய்தால்தான் புதிய நிறுவனம் சர்க்கரை ஆலையை திறக்கவும் கரும்பு சாகுபடி செய்யவும் முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர் இதற்கு உரிய பதில் வழங்காததால் கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )