தஞ்சையில் காவல் கட்டுப்பாடு வயர்லஸ் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ராம்குமார் என்ற வாலிபர் போலிசார் எச்சரித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு கீழே இறங்கினார்கள்.

தஞ்சாவூர்,
பாட்டி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடற்கூறு ஆய்வு அறிக்கை கேட்டு தஞ்சை கிழக்கு காவல் நிலையம் அருகில் உள்ள காவல் கட்டுப்பாடு வயர்லஸ் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ராம்குமார் என்ற வாலிபர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கீழே இறங்கி வந்தார்.
தஞ்சை தொம்பன் குடிசை பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார் 33 வயதான இவருக்கு திருமணமாகவில்லை. 95 வயதான பாட்டி வளர்ப்பில் வளர்ந்து வந்தார் ராம்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராம்குமார் பாட்டி நவநீதம் இறந்துவிட்டார்.
தனது பாட்டி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தாய்மாமன் கொலை செய்துவிட்ட தாகவும் கூறி பாட்டியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை தருமாறு கேட்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தராததால், மனம் உடைந்த ராம்குமார் தஞ்சை கிழக்கு காவல் நிலையம் அருகில் உள்ள 250 அடி உயரமுள்ள காவல் கட்டுப்பாடு வயர்லஸ் கோபுரம் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
பொறியியல் பட்டதாரியான ராம்குமாரிடம் தஞ்சை நகர டிஎஸ்பி ராஜா செல்போனில் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கீழே இறங்கி வர செய்தார்.
டவரில் இருந்து இறங்கி வந்த ராமகுமாரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.