தஞ்சையில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் பலவந்தமாக கீழே தள்ள முயன்றதால் பரபரப்பு நிலவியது.

தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் காலை முதல் சத்தியாகிரக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சத்தியாகிரக போராட்டத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியினர்.


ஆக்ரோச கோஷத்துடன் தஞ்சை அண்ணா சிலைக்கு பேரணியாக வந்தபோது காவல்துறையினர் காங்கிரஸ் கட்சியினரை பலவந்தமாக கீழே தள்ள தள்ள முயன்றதோடு ரவுடிகள் எனவும் காட்டமாக காவல்துறையினர் திட்டினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதை எடுத்து 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
