தஞ்சை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போய் உள்ளது அடிக்கடி நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.

தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சிகிச்சைக்கு வருகிறவர்கள் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது இந்நிலையில்,
கடந்த 10ம் தேதி மனைவியின் பிரசவத்திற்காக வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் தஞ்சை வண்ணாரப்பேட்டை சேர்ந்த மதிவாணன் உள்பட நான்கு பேரின் இருசக்கர வாகனங்கள் ஒரே நாளில் திருட்டுப் போய் உள்ளது இது குறித்த சிசிடிவி காட்சிகளுடன் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது இது போன்று வாகனங்களை பறிகொடுத்து வருவதால் அவர்கள் மேலும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜி நாதனிடம் கேட்டபோது ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பழைய கட்டிடங்கள் நிறைய உள்ளது.
எனவே 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் இன்னும் பத்து பதினைந்து நாட்களில் சரி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.