தஞ்சை அருகே 24 மனி நேரமாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசு பள்ளி ஆசிரியை தீயணைப்புத் துறையின் உதவியோடு உயிருடன் மீட்பு

தஞ்சாவூர்,
தஞ்சை பள்ளியக்கரஹாரம் வெண்ணாற்று அருகே அரசு பள்ளி ஆசிரியை ரேவதி என்பரிடம் மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலியை பறித்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ஆசிரியை ரேவதி வெண்ணாற்று தென் கரையில் கழுத்து அளவு தண்ணீரில் இருந்து கொண்டே வெளியே வர மறுத்து விட்டார். இந்நிலையில் பள்ளி அக்ரஹாரம் வார்டு 1 இல் மாநகர பகுதி சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் தஞ்சை மாநகர மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகர ஆணையர் சரவணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த சிலர் ஆசிரியை ஆற்றில் தத்தளிப்பது குறித்த தகவலை தெரிவித்ததை அடுத்து மேயர் ஆணையர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்புத் துறையினரை வரவழைத்து உடனடியாக ஆசிரியர் ரேவதியை மீட்டு 108 மூலமாக தஞ்சை மற்றுக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.