தஞ்சை மாநகராட்சி மேயர் பள்ளி பருவத்தில் நடந்தவைகளை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் கலந்து கொண்ட தஞ்சை மாநகராட்சி மேயர் பள்ளி பருவத்தில் டிராயர் போட்டுட்டு சைட் அடிச்ச பழைய, பருவ நினைவுகள் வந்துடுச்சினு பேச ஆரம்பித்தவர் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப்பள்ளியில் 1999 முதல் 2002 வரை படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்வு பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தான் பக்கத்தில் உள்ள பள்ளியில்தான் படித்தேன் என பேச ஆரம்பித்தவர் எங்கள் பள்ளியில் மாணவிகள் கிடையாது.
அதனால். நாங்க பாலைவனத்துல படகு ஓட்டுனவங்க என தொடங்கி, அரசர் பள்ளிக்கு வந்து கம்பி பின்னால் நின்னு ஐஸ் வாங்கி சாப்பிட்டது. காத்து வாங்குறதுக்கு வகுப்பை கட் பண்ணிட்டு வந்தது.
செருப்பை பேட்டாக்கி கல்லை தூக்கி போட்டு செருப்பு கிரிக்கெட் விளையாடிய காலம். பள்ளி வாசலில் பழம் விற்ற பாட்டியிடம் இலந்தை பழம் வாங்கி தின்னது. ஜவ்வு மிட்டாய் | கமர்கட், தின்னது. என பழைய நினைவுகளுக்கு போனவர்.

பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் பழைய நினைவுகள் வந்துடுச்சி. டிராயர் போட்டுட்டு யார் பின்னால போனோம். யாரெல்லாம் முன்னாடி போனாங்க என்ற நினைப்பு வந்துடுச்சி தான சைட் அடிதத பள்ளி பருவ நினைவுகளை அசைபோட்டார்.
96 படம் பார்க்கும்போது ரொம்ப பீல் வரும் என தனது பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டார் மேயர் சண்.ராமநாதன்.
