BREAKING NEWS

தஞ்சை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு

தஞ்சை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு

தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு.. மாணவர்கள் உயர்கல்வி பயில மாநகராட்சி சார்பில் உதவிடுவோம் என உறுதி. மாநகராட்சி பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கமே காரணம் என மாணவர்கள் மகிழ்ச்சி.

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணிவிகளை பாராட்டி தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் இனிப்புகள் வழங்கி , சால்வை அணிவித்து, பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்… பின்னர் இது குறித்து அளித்த மேயர் சண்.இராமநாதன்.

 

மாநகராட்சி பள்ளிகளில் படித்து மாணவர்கள் அதிகம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது… முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் உயர்கல்விக்கு செல்ல தேவையான பயிற்சிகளை மாநகராட்சி செலவில் செய்து தரப்படும், இதேபோல் தொடர்ந்து உயர்கல்வி பயில உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரும் என்றார். தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 97 சதவீதம் உள்ள நிலையில் 100 சதவீதமாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார்.

இது குறித்து பேட்டி அளித்த மாநகராட்சி பள்ளி மாணவி 12 ம் வகுப்பு மாணவி அபிநயா.

ஆசிரியர்களின் ஊக்கமும், உழைப்பும் தான் நாங்கள் அதிக மதிப்பெண் எடுக்க காரணம். உயர்கல்விக்கான உதவிகளை மேயர் செய்து தர உறுதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )