BREAKING NEWS

தனியார் கல்லூரியில் இரத்த தான முகாம்.

தனியார் கல்லூரியில் இரத்த தான முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே காழியப்பநல்லூர் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சார்பில் இரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் டேனியல் செபஸ்டின் தலைமையில் நடைபெற்ற முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அலுவலர் மருத்துவர் செந்தில்குமார், வட்டார சுகாதார அலுவலர் மருத்துவர் கார்த்தி சந்திரகுமார், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ரத்த தான முகாமில் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி.கமலக்கண்ணன் தாமாக முன்வந்து ரத்ததானம் வழங்கினார். ரத்த தானம் வழங்கிய மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மூலம் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )