BREAKING NEWS

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி ஆணையர் திடீர் உத்தரவு.

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி ஆணையர் திடீர் உத்தரவு.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, தங்களது வீடுகளிலேயே, தங்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் முழு தகவல்களையும் தனியார் மருத்துவமனைகள் சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சாவல்களை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சி தயாராக உள்ளது. – மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.

கொரோனா தொற்று உலகம் முழுவதுமே குறைந்து வந்த நிலையில், மக்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்தியாவில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு தொடர்ந்து ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும்  தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளும், சிகிச்சை மையங்களுக்கும் சென்னை மாநராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் குறித்தும், தங்களது வீடுகளில் பாதுகாப்பாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் குறித்தும் விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )