BREAKING NEWS

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது – ஓ. எஸ் மணியன்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது – ஓ. எஸ் மணியன்.

தரங்கம்பாடி,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது என்றால் அதற்கு எவரும் மாற்று கருத்து தெரிவிக்க முடியாது மேலும் போதை பொருளின் சந்தை தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி எளிதாக போதைப் பொருள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் .பவுன்ராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக,பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஓ .எஸ் . மணியன் முன்னிலையில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

 

 

அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டு மற்றும் சான்றாக உள்ளது , இலங்கையில் நடந்த கலவரம் போல் இங்கேயும் கலவரம் நடந்திருப்பது வெட்கக்கேடாக உள்ளது.

சசிகலா அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் என்று கூறும் நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அதற்கு பதில் கூறுவது நீண்ட நேரம் ஆகும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து திமுக அரசு சென்ற ஆண்டு முதல் தற்போது வரை குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கவில்லை என்றும் , தொடர்ந்து யூரியா தட்டுப்பாடு என்பதை விட இல்லை என்ற நிலை இருப்பதாகவும் எப்போது கூட்டுறவு சங்கத்திற்கு யூரியா வரும் என தெரியவில்லை என்றும் கூறினார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை மோசமாக நடந்து கொண்டிருப்பதாகவும் காவல் துறையை பார்த்து அச்சப்படுகிற நிலை தமிழகத்தில் இல்லையோ என அஞ்சுகிற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.வி. பாரதி, சக்தி, ஒன்றிய செயலாளர் இளங்கோவன், விசலூர் கண்ணன், ஜனார்த்தனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

படவிளக்கம்: பெரம்பூரில் திமுக, பாஜக மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மானியன் கலந்து கொண்டு பேசியபோது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )