தமிழகம் முழுவதும் விசிக சார்பில் இன்று மனித சங்கிலி.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகத் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மனிதச் சங்கிலி நடைபெறுகிறது.
தமிழகத்தில் சாதி, மத, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை. சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு.
இதை உணர்த்தும் வகையில் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறுகிறது.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.
சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் சங்பரிவார், வலதுசாரி அமைப்புகளுக்குத் தமிழகத்தில் இடமில்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த அறப்போர் நடைபெறுகிறது.
சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை நடைபெறும், இந்த மனிதச் சங்கிலியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.