தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி மாவட்டதில் நடைபெற்றது.

தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் பி. ஆர்.முரளி சங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பால மார்த்தாண்டபுரம் கிராமத்தில் கோட்டாட்சியர் பி.கங்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கலா.ஊராட்சி தலைவர்சந்திரசேகரன். துணைத் தலைவர் மாரிமுத்து மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்முகாமில் காது மூக்கு தொண்டை இருதயம் பல் தோல் சர்க்கரை நோய் குழந்தைகள் நல மருத்துவர் மகப்பேறு மருத்துவர் சித்தா மற்றும் புற்றுநோய் காசநோய் எலும்பு கண் முதியோர் நலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேலும் சளி இரத்தம் இரத்த அழுத்த பரிசோதனை இசிசி ஸ்கேன் போன்ற ஆய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது சிகிச்சைக்கு வருவோருக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது பொது சுகாதாரம் பற்றிய விளக்கப் படங்களும் விழிப்புணர்வு காட்சிகளும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
