தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு புத்தாடைகள் பழங்கள், ரொட்டிகள் என பல்வேறு உதவிகள்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் தஞ்சை அரசு மருத்துமனையில் உள்ள 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கு புத்தாடைகள் பழங்கள், ரொட்டிகள் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளரும் துணை மேயருமான அஞ்சுக பூபதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்சியில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. சந்திரசேகரன் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் மேயர் சன் ராமநாதன் ஆகியோர் மருத்துவ மனைக்கு தேவையான உபகரணங்கள்,


300 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு புத்தாடைகள் ஆடைகள், கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள், ரொட்டிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
CATEGORIES தஞ்சாவூர்
