தமிழ்நாடு அரசின் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி வட்டார அளவிலான போட்டி திருநெல்வேலி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கல்லணையில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
அரசு பள்ளிகள் மாணவர்கள் பங்கு பெற்ற இந்த பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் முதலிடத்தை செல்வச் சாருகேஷ்,முகிலன், சுந்தரமூர்த்தி ஆகியோர் பெற்றனர் இரண்டாம் இடத்தை அப்பள்ளியைச் சேர்ந்த கார்த்தி மூன்றாம் இடத்தை அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுதாகர்,விஜய் சுப்பிரமணியம் ஆகியோர் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை அப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் உடற்கல்வி ஆசிரியர் திரு முத்துக்குமார் உடற்கல்வி இயக்குனர் திரு சாம் நியூட்டன் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்தினர்.
