BREAKING NEWS

தம்பியை ஆட்களை ஏவி கொலை முயற்சி!! அக்கா பகீர் வாக்குமூலம்!!

தம்பியை ஆட்களை ஏவி கொலை முயற்சி!! அக்கா பகீர் வாக்குமூலம்!!

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியைச் சேர்ந்த சூர்யா என்ற 24 வயது வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சூர்யாவை வெட்டியவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சூர்யாவின் சித்தி மகளான மனிஷா (வயது 25) என்பவர் விஷம் குடித்ததாகக் கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மனிஷா விஷம் எதுவும் அருந்தவில்லை கூறியதால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து மனிஷாவிடம் போலீசார் விசாரித்த போது அரசியல் பிரமுகர் ஒருவர் தனக்கு காதல் தொல்லை கொடுத்ததால் விஷம் அருந்தினேன் என்று முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் மருத்துவர்கள் மனிஷா விஷம் அருந்தவில்லை என்று கூறியதால் அவர் மீதான சந்தேகம் வலுத்தது.

அக்கா

மனிஷாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் அவருக்கு சர்தார் என்ற நபர் அடிக்கடி போன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

மனிஷாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தனியாக வசித்து வந்த மனிஷாவுக்கும், சர்தார் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது குறித்து அறிந்த அவரது தம்பி சூர்யா, இதனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனிஷா தம்பியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

இதற்கு ஒப்புக் கொண்ட சர்தார் தனது நண்பர்களான யோகராஜ், கவுதம், ரியாஸ் ஆகியோரின் உதவியுடன் சூர்யாவை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சூர்யா உயிர் தப்பியுள்ளார். எங்கே தான் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த மனிஷா தற்கொலை நாடகமாடியது அம்பலமானது.

சர்தாரின் வாக்குமூலத்தின்படி மனிஷா, சர்தாரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மனிஷாவின் சகோதரி சீமாதேவியையும் உடந்தையாக இருந்த காரணத்திற்காக கைது செய்துள்ளனர். மனிஷாவின் கணவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த போலீசார், தற்போது அந்த வழக்கு குறித்தும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.கள்ளக்காதலை எதிர்த்த தம்பியை அக்காவே ஆட்களை ஏவி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )