தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி
தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட சடைய கவுண்டன் புதூர் ரயில்வே பாலத்தில் மழைநீர் மற்றும் வாய்க்கால் உபரி நீர் பெருமளவில் நிற்பதால் வண்டி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்துகள் செல்ல முடியாததால் பள்ளி செல்லும் மாணவர்கள், வயதானவர், நோயாளி என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாலத்தின் அருகே வாய்க்காலில் நீர் வரத்து காரணமாக தண்ணீர் ஊற்று போல ஊறி வண்ணம் உள்ளதால் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினால் மீண்டும் தண்ணீர் தேங்கி விடுகிறது என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
