தலைப்பு செய்திகள்
ரோமானியா நாட்டைச் சேர்ந்த நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ் என்பவர்
திமுக சார்பில் பிரச்சாரம் செய்துள்ளார்.
தொழில் காரணமாக ரோமானியா நாட்டைச் சேர்ந்த நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ் என்பவர் கோவைக்கு வந்து இருந்தார் அப்போது அவர் திமுக சார்பில் பிரச்சாரம் செய்துள்ளார்.
பெண்களுக்காக திமுக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இலவச பேருந்து வசதி செய்து கொடுத்ததால் ரோமானியா நாட்டைச் சேர்ந்த நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ் என்பவர் இந்தத் திட்டத்தை புகழ்ந்துள்ளார்.
உடனடியாக கோவையில் வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் உடன் இணைந்து இவர் ஓட்டி கேட்டுள்ளார் மேலும் இருசக்கர வாகனத்தில் சென்று கையில் திமுக கொடியை வைத்து ஓட்டு கேட்டுள்ளார் இது அப்பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இவ்வாறு அரசியல் பிரச்சாரம் அரசியல் நிகழ்வுகள் போன்றவைகளில் கலந்து கொள்ள கூடாது என 1946 எந்த சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை கிடைக்கும் என சென்னை மத்திய இமிகிரேஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.