BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தபின் ஆட்சியர் திருமதி லலிதா பேட்டி :-

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து வாக்குச்சாவடி முகவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா மயிலாடுதுறை மாவட்டத்தில் 177 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 51 மையங்கள் பதட்டமானவை என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காவல்துறை பாதுகாப்போடு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,20 சதவீத வாக்கு இயந்திரங்கள் ஆர்.ஓ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , 10 சதவீத வாக்கு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு நகராட்சிக்கும் இரண்டு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வாக்கு இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா தெரிவித்தார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )