தலைப்பு செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைபட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளி இரண்டாம் நம்பர் வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 7 மணிக்கு நடைபெறவிருந்த வாக்குப்பதிவு தடைபட்டது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பேட்டரி பழுதை சரி செய்த பின்பு 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு பதிவு செய்து வருகின்றனர்.
CATEGORIES தூத்துக்குடி