தலைப்பு செய்திகள்
திண்டுக்கல் மாநகராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் அமைச்சர் ஐ பெரியசாமி குடும்பத்தினருடன் வந்து வாக்கு பதிவு செய்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு பதிவு செய்தார் .தமிழகம் முழுவதும் 100 சதவீதம் திமுக வெற்றி பெறும் அமைச்சர் பேட்டி.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 3 நகராட்சி 23 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி வாக்கு மையத்தில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழகம் முழுவதும் திமுக 100 சதவீதம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறினார்.