தலைப்பு செய்திகள்
உடுமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு .
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு-33 ல் குழப்பம்: உடுமலை நகராட்சி 33 வது வார்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கியது. இந்நிலையில் சுமார் எட்டு முப்பது மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பொறியாளர்கள் அங்கு விரைந்து சென்று பழுது நீக்கும் பணியை செய்து வருகின்றனர். இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரமாக காத்திருக்கின்றனர். இது குறித்து ஆணையாளர் சத்தியநாதன் கூறியது. குறிப்பிட்ட அந்த வார்டில் பெல் நிறுவன பொறியாளர்களை வைத்து பழுதுகள் நீக்க முயற்சிக்கப்பட்டது. இந்த முயற்சி பலன் அளிக்காததால் அந்த வார்டுக்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
CATEGORIES திருப்பூர்