தலைப்பு செய்திகள்
ஆத்தூர் காந்திநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்,
தமிழகத்தில் இன்று நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. வாக்களர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தி வருகிறார்கள்.
அதை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் அரசு நடுநிலைப்பள்ளியில் 18 வயது முடிவடைந்த முதல் இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருவகின்றனர்.
மேலும் கல்லூரி மாணவி முதல்முறையாக நான் வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக இருப்பதாக செய்தியாளர்களிடத்தில் இவ்வாறு பேட்டியில் தெரிவித்தார்.
CATEGORIES சேலம்