BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ கேமிராமேன்கள் வெளியே சென்றால்தான் வாக்களிப்பேன் என்று பிடிவாதம் செய்தார் கமல்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்துக்கு வாக்களிக்க இன்று வந்த மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ கேமிராமேன்கள் வெளியே சென்றால்தான் வாக்களிப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்துக்கு வாக்களிக்க இன்று வந்த மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ கேமிராமேன்கள் வெளியே சென்றால்தான் வாக்களிப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.

தமிழகத்தில் இன்று 21 மாநகராட்சி, 138 நகராட்சி, ஊராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. சென்னையில் நடந்துவரும் மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஏராளமான விஐபிக்கள்,நடிகர்கள், நடிகைகள் என பலரும் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகிறார்கள். திமுக தலைவரும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்களித்துச் சென்றார். சென்னையில் வாக்குரிமை இருக்கும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வாக்களித்து வருகிறார்கள்.

மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்துக்கு இன்று காலை வாக்களிக்க வந்தார். அப்போது, அவரை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் ஏராளமான பத்திரிகை புகைப்படக் கலைஞர்களும், சேனல் கேமிராமேன்களும் கூடியிருந்தனர். ஆனால், அவர்களைப் பார்த்ததும் வாக்குப்பதிவு அதிகாரியிடம் சென்ற கமல் ஹாசன் கேமிராமேன்கள் அனைவரும் வாக்குப்பதிவு அறையை விட்டு வெளியேனால்தான் வாக்களிப்பேன் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, வாக்குப்பதிவு அதிகாரி, பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள், சேனல் கேமிராமேன்களை அறையைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அரசியல் கட்சித் தலைவரை புகைப்படம் எடுக்கும் நோக்கில் கேமிராமேன்களும், புகைப்படக் கலைஞர்களும் சற்று தாமதித்தனர். ஏறக்குறைய 3 நிமிடங்கள் வரை ப்ளீஸ் வெளியே செல்லுங்கள், ப்ளீஸ் வெளியே செல்லுங்கள் என கமல் ஹாசனும், வாக்கு மைய அதிகாரியும் கேட்டுக்கொண்டனர்.

சார் ஓரமாக நின்று கொள்கிறோம் என்று புகைப்படக் கலைஞர்களும், வீடியோகேமிராமேன்களும் கமல்ஹாசனிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு “அதெல்லாம் வேண்டாம் சார் ப்ளீஸ் வெளியே செல்லுங்கள்” என்று கூறி கைகூப்பி கேட்டுக்கொண்டார். வாக்களாரின் உரிமையை மதிக்க வேண்டும் என்பதால் பத்திரிகை புகைப்படக்கலைஞர்ளும், டிவி கேமிராமேன்களும் வாக்குப்பதிவு அறையை விட்டு வெளியேறினர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )