தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 456 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதியம் 3 மணி 30 நிமிடம் மணி நிலவரப்படி 38.4% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி – 25.7%,
கும்பகோணம் மாநகராட்சி – 49.9% வாக்குகள் பதிவாகியுள்ளன. தஞ்சாவூர் மானம்புச்சாவடி சௌராஷ்ட்ரா நடுநிலைப்பள்ளியில்
31 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜெய்சதீஷ் தன் குடும்பத்துடன் வாக்களித்தார்.
வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்களுக்கு கொரோன விதிமுறைக்கு உட்பட்டு வாக்காளர்களுக்கு கிருமி நாசினி,முகவசம்,மற்றும் கை உறை,கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்