BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நிறைவுற்றது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு – வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது வாக்குப்பதிவு எந்திரங்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6மணியுடன் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்துக்கட்சி முகவர்கள் முன்பு சீல் வைக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து EVM இயந்திரத்தை எடுத்துச் செல்லும் பணி துவங்கியது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள்
வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது .
வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரி மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அடங்கிய அறையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர்
3அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதே போல் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 5நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையுடன் பலத்த பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

இன்று நடைபெற்ற வாக்கு பதிவானது வரும் 22ஆம் தேதி காலை
8மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )