தலைப்பு செய்திகள்
மாநில அளவிலான உடற்கட்டு போட்டி, வளுதூக்கும் போட்டி – 530 ஆண்கள், 40 பெண்கள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்பிளாசா அருகே தனியார் திருமண மண்டபத்தில் ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான உடற்கட்டு போட்டி, வளுதூக்கும் போட்டி திருச்சி மாவட்ட வலுதூக்கும் போட்டி செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இப் போட்டியில் 530 ஆண்கள், 40 பெண்கள் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்தி பரிசு மற்றும் பட்டம் பெற்றனர்.
இந்தியன் உடற்பயிற்சி கூட்டமைப்பு மற்றும் சமயபுரம் வலுவான உடற்பயிற்சி கூடம் இணைந்து மாநில அளவிலான உடற்கட்டு போட்டி, வளுதூக்கும் போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் திருச்சி,
அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 530 ஆண்கள், 40 பெண்கள் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளின் நடுவராக ஜெகநாதன், தனசேகர், ஸ்டாலின், மணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டனர்.
உடற்கட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசன், பெண்கள் பிரிவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த சங்கீதா ஆகியோர் முதலிடம் பெற்று எல்இடி டிவியினையும் வலுவான உடற்கட்டு ஆண், வலுவான உடற்கட்டு பெண் என்ற பட்டத்தினை மாநில பொதுச் செயலாளர் ஜெகநாதன், திருச்சி மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் வழங்கினர். இதே போல பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற வளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.