தலைப்பு செய்திகள்
ஆசியாவிலேயே “பெரிய சாண எரிவாயு ஆலை” – பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஆசியாவிலேயே பெரிய சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி, இந்தூரில் இருக்கும் ஆலையை இன்று திறந்து வைத்தார்.
குப்பைகள் இல்லா நகரங்களை உருவாக்க தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தொலைநோக்கு பார்வையுடன், கழிவை பணமாக்கும் மற்றும் சுழற்சி பொருளாதாரம் என்ற கொள்கைகளின் இந்த ஆலை வடிவமைக்கபட்டது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்ட சாண எரிவாயு ஆலையை, பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார். இந்தூரில் 150 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரியதாக, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலையாக இந்தூர் ஆலை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த ஆலையில் 550 டன் இயற்கை கழிவுகளை தரம்பிரிக்கும் திறன் கொண்டதாகும். அதே போல், அந்தக் கழிவில் இருந்து 17 ஆயிரம் கிலோ இயற்கை எரிவாயுவையும், 100 டன் எடைக்கொண்ட இயற்கை உரங்களையும் இந்த ஆலை உற்பத்தி செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“இந்தியாவை தூய்மைப்படுத்த இதுபோன்ற சாண எரிவாயு ஆலைகள் அதிக அளவில் அமைக்கப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 75 பெரிய நகரங்களில் இதுபோன்ற எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும். நாட்டில் உள்ள நகரங்களை தூய்மையாகவும், மாசில்லாத பகுதிகளாகவும் மாற்றும் வரை இந்த இயக்கம் தொடரும்” என சாண எரிவாயு ஆலையைத் திறந்துவைத்து பிரதமர் மோடி பேசினார்.
இந்தூர் இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம். இங்கு இயற்கை முறையில் சாண எரிவாயு ஆலை ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலையாக இன்று திறக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தூய்மையான நகரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். இந்தூர் இதுவரை இந்த விருதை ஐந்து முறை பெற்றிருக்கிறது.