BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. குழப்பம் தீர்ந்தது.. விடுமுறையை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

சென்னை தமிழகத்தில் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறையா என்ற குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், அதற்கான அதிரடி உத்தரவு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.. நாளைய தினம் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது…

குழப்பம்

அதேபோல, 50 சதவீதம் மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்த பள்ளிகளுக்கு கடந்த 18ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளைய தினம், அதாவது 22ம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.. அதுமட்டுமல்லாமல், தேர்தல் பணிக்கு சென்ற 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

மறுவாக்குப்பதிவு

எனவே, மறுபடியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்றைய தினம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.. இந்த அறிவிப்பு வெளியானதால், இன்றைய தினமும் தமிழகத்தின் பள்ளிகளக்கு விடுமுறை அறிவிக்கப்படுமோ என்ற எண்ணம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது..

நிராகரிப்பு

ஆனால், ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்துவிட்டது.. எங்கெல்லாம் மறுவாக்குப்பதிவு நடக்கிறதோ அங்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அளித்துள்ளது.. அதுமட்டுமல்ல, மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கட்டாயம் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றும் ஆர்டர் பறந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஒரு செய்தி குறிப்பையும் வெளியிட்டுள்ளது..

ஞாயிற்றுக்கிழமை அதில், தமிழகத்தில் இன்று வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும்.. மறு வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது… நேற்றைய தினம் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )