தலைப்பு செய்திகள்
உலக தாய்மொழி தினமான இன்று சீனாவில் உள்ள யுனான் மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், செஞ்சீனத்தில் தமிழை பரப்பும் முனைப்போடு கடந்த 2019-ம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி என்ற கிகி ஜாங் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக கற்க கசடற, செம்மொழி குறிஞ்சி, மெய்ப்பொருள் காண்பதறிவு உள்ளிட்ட தமிழ் மொழியில் வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியபடி தமிழ் மொழிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES Uncategorized