BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கேரள மாநில அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்க, பேச தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு.

இந்தியாவில் ரயில் பயணத்தின்போது, குடும்பத்தினர், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு போவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என குதூகலமாக பயணிகள் பயணிப்பர். அதேபோல், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளும், செல்போனில் சத்தமாக பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பல சமயங்களில் சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவும் பயணத்தின் போது சத்தமாகப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு பேருந்துகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )