BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை.

நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை.. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக ஆய்வுக்கு பின் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி.

நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன பதிவான வாக்குப் பெட்டிகள் 7 இடங்களில் தனி தனி அறையில வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புக்கு நிறுத்தப்படடுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள், இரண்டு நகராட்சிகள், இருபது பேருராட்சிகளுக்கு வாக்குப் பதிவு நடந்துள்ளன மாவட்டத்தில் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் தஞ்சையில் இரண்டு மையங்கள்.

கும்பகோணத்தில் இரண்டு மையங்கள் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேரவூரணி ஆகிய இடங்களில் தலா ஒரு மையங்கள் என 7 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த 7 மையங்களிலும் வாக்குப் பெட்டிகள் தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாநகராட்சி உறுப்பினர்களுக்கான வாக்கு என்னும் மையமான மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் இன்று மாலை ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..

வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். முதலில் தபால் ஓட்டுகள் என்னப்பட்டு, தொடர்ந்து மின்னணு வாக்குஎந்திரத்தில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு , முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்றார்…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )