BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் அமைந்திருந்த கடைகளை அதிகாரிகள் இன்று அகற்றின.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகள் இன்று அகற்றப்பட்ட நிலையில், மாற்று இடங்களில் மின் வசதிகளை உடனே செய்து தருமாறு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உலகின் முதல் ஷாப்பிங் மால் என அழைக்கப்படும் மதுரை புதுமண்டபத்தில் சுமார் 200 ஆண்டுகள் பாரம்பரியம் நிறைந்த பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், அலங்கார பொருட்கள் விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், பாத்திரக் கடைகள், தையல் கடைகள் மற்றும் பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் இயங்கி வருகின்றன.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மண்டபத்தில் கலை நயமிக்க சிலைகள், சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் உள்ளமையால் இதனை காட்சி பொருளாக மாற்றி பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்தது. அது தொடர்பாக அங்குள்ள வியாபாரிகளிடம் ஆலோசித்து, கடைகள் அனைத்தையும் புதுமண்டபம் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடம் மாற்ற இறுதி செய்யப்பட்டது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )