தலைப்பு செய்திகள்
செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 396 நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 9 வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணியை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.