BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

விருதுநகர் நகராட்சியை திமுக கூட்டணி கைபற்றியுள்ளது.

விருதுநகர் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 20 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்று, விருதுநகர் நகராட்சியை திமுக கூட்டணி கைபற்றியுள்ளது.

20 வார்டுகளில் திமுக வெற்றி: விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2, 4, 5, 7, 9,10,12,16,18,19, 21, 22, 23, 28, 29, 30, 32, 35, மற்றும் 36 உட்பட 20 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திமுக கூட்டணி சார்பில் அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8,14,15, 17, 20, 25, 26, மற்றும் 27 -வது வார்டுகள் உட்பட 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24-வது வார்டிலும் வெற்றி பெற்று விருதுநகர் நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இத் தேர்தலில் 3, 31 மற்றும் 33 உள்ளிட்ட 3 வார்டுகளில் அதிமுகவும், அமமுக 6-வது வார்டிலும் வெற்றி பெற்றன. விருதுநகர் நகராட்சியின் 11, 13 மற்றும் 34-வது வார்டில் போட்டியிட்டு 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

 

சாத்தூர் நகராட்சி: சாத்தூர் நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடைந்த நிலையில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக 18 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டுகளிலும், அதிமுக, அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலா ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

சுந்தரபாண்டியம் பேரூராட்சி: சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடைந்த நிலையில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

15க்கு 15 வெற்றி: விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியை 15க்கு 15 என்ற கணக்கில் திமுக கைப்பற்றியுள்ளது. இது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )