தலைப்பு செய்திகள்
திமுக அபார வெற்றி. அடுத்தடுத்து சரியும் அதிமுக கோட்டைகள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையில், திமுக 31 வார்டு களையும், அதிமுக 3 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கோட்டையாகக் கருதப்படும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுகவின் கை ஓங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் வீடு, சேலம் நெடுஞ்சாலை 23வது வார்டு பகுதியில் உள்ளது. அந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையில், தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. குச்சனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில் வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்:
1 – அதிமுக- சாந்தி கிருஷ்ணகுமார்
2 – திமுக- உமா மகேஸ்வரி
3 – திமுக- இந்திரா
4 – திமுக- கிருஷ்ணகுமார்
5 – சுயேட்சை – தேவகி
6 – திமுக – சுதா
7 – திமுக – நர்மதா
8 – அதிமுக – வசந்த்
9 – திமுக – கலைவாணி
10 – திமுக- ஷாமலா
11 – திமுக – ஜோதிமணி
12 – திமுக – பழனிச்சாமி
13 – திமுக – மணிமாலா
14 – திமுக – நாகராஜ்
15 – மதிமுக – சையது யுசுப்
16 – திமுக – கவிதா
17 – திமுக – கந்த மனோகரி
18 – திமுக – கீதாலட்சுமி
19 – அதிமுக – ஜேம்ஸ் ராஜா
20 – திமுக – பாலமுருகன்
21 -திமுக – இளமாறன்
22 – திமுக – மணிக்கராஜ்
23 – திமுக – லோகநாயகி
24 – திமுக – தங்கவேல்
25 – சுயேட்சை – பாலகிருஷ்ணன்வேணி.
26 – திமுக – சாந்தலிங்கம்
27 – திமுக – விஜய காயத்ரி
28 – திமுக – நிலாபர் நிஷா
29 – திமுக – பாத்திமா
30 – திமுக – நாச்சிமுத்து
31 – திமுக – சரிதா
32 – திமுக – பெருமாள்
33 – திமுக – ஷண்முகபிரியா
34 – திமுக – வைஷ்ணவி
35 – திமுக – கௌதமன்
36 – திமுக – செந்தில்குமார்
இந்நிலையில், திமுக கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.